எங்கள் சேமங்கலம் கிராமம்
எங்கள் சேமங்கலம் கிராமமானது சீர்காழி தாலுக்காவில் அமைந்துள்ளது. எங்கள் கிராமத்தின் ஊராட்சி ஒன்றியம் செம்பனார்கோவில். தெற்கு எல்லையாக ஆலவேலி கிராமம், கிழக்கே கூத்தூர் கிராமம், மேற்கே திருநன்றியூர் மற்றும் ஆத்துகுடி கிராமங்கள் அமைந்துள்ளன.
எங்கள் கிராம பஞ்சாயத்தில் கூத்தூர், எருமல், கண்டமங்கலம் மற்றும் தொக்களாக்குடி கிராமங்கள் உள் அமையப் பெற்றுள்ளன. இக்கிராமங்களின் முக்கிய பயிர் நெல் மற்றும் உளுந்து, பாசிப்பயறு ஆகும்.
சேமங்கலம் கிராமத்தில் சென்பகவல்லி மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம், ஸ்ரீ அகஸ்தீஸ்வர ஸ்வாமி ஆலயம், ஐயனார் ஆலயம் ஆகியன அமையப்பெற்றுள்ளன. இக்கிராம பஞ்சாயத்தில் சுமார் 3500 மக்கள் வாழ்கின்றனர்.
கிராமத்தின் இதர செய்திகளை மற்றொரு நாள் காண்போம்.
அன்பன்

No comments:
Post a Comment